வெள்ளி, மார்ச் 01, 2013

அனைத்து மகளிர் வங்கி

2013 க்கான பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் ப. சிதம்பரம், மகளிருக்கான  பொதுத்துறை வங்கி ஒன்று துவக்கப்படும்  என்று அறிவித்திருக்கிறார். இந்த வங்கி மகளிர் மட்டும் என்ற அடிப்படையில் செயல்படும் என்றும் கூறியிருக்கிறார்.

இது நடந்துவிட்டால் இந்த மாதிரியான நிகழ்ச்சிகளை நாம் எதிர்பார்க்கலாம் அல்லவா ?

மகளிர் வங்கியின் தி.நகர் கிளை. குளிரூட்டப்பட்ட அறையில்  கம்பீரமாக அமர்ந்திருக்கிறார் மேனேஜரம்மா. ஒரு பெண் வாடிக்கையாளர் நுழைகிறார்.

"வணக்கம், மேனேஜரம்மா. என் பேர் சாந்தி ".

"வணக்கம். வாங்க, வாங்க. உங்களுக்காகத் தான் காத்திருக்கிறோம். என்ன வேண்டும் உங்களுக்கு?"

"ரொம்ப நன்றி அம்மா! நான் புதிதாக ஒரு கடை ஆரம்பிக்கபோகிறேன் , அதற்குக் கடன் வேண்டும்".

"ஆஹா, ரொம்ப சந்தோஷம். இந்த வங்கி ஆரம்பித்து  நீங்கள் தான் முதல் கடன் பெறப்போகிறீர்கள். அநேகமாக  மத்திய நிதி அமைச்சரே தன்  கைகளால் உங்களுக்கு இதை வழங்குவார் என்று எண்ணுகிறேன். உங்களுக்கு ஆட்சேபணை இல்லையே?"

"எனக்கு என்னங்க ஆட்சேபணை ? டி வி ல நல்ல வருமில்லே?"

"நிச்சயமாக! சரி, என்ன சாப்பிடுகிறீர்கள், டீ யா, காப்பியா, இல்லை, கூல் ட்ரிங்க்சா?"

"பரவாயில்லீங்க, சரவண பவனிலிருந்து ஒரு பொங்கல் வடையும் சொல்லிடுங்களேன். நாம்ப விளக்கமாகப் பேச வேண்டியிருக்கும் இல்லீங்களா?"

"கண்டிப்பா! ஏம்மா, மைனாவதி, ஓடிப்போய் நம்ப வாடிக்கையாளர் அம்மாவுக்கு ஒரு பொங்கல் வடை காப்பி வாங்கிண்டு வா. அப்படியே எனக்கும் ஒரு செட்டு. சக்கரை கம்மியா இருக்கணும். உனக்குத் தான் தெரியுமே!"

மைனாவதி போய் வருவதற்குள் இன்னொரு வாடிக்கையாளர் (பெண்) வருகிறார்.

"வாங்க, வாங்க" .

"வணக்கம், மேனேஜரம்மா".

"வணக்கம். உங்க பேர் சொல்லுங்க. நம்ப வங்கிக்கு வந்த காரணம்  என்ன? டெபாசிட் போடணுமா, இல்லே லோன் வேணுமா?"

"என் பேரு கீதாராணி. நான் வீட்டிலிருந்தபடியே அப்பளம், வடகம், ஊறுகாய் எல்லாம் செய்து விற்கிறேன். அம்மாவுக்கு என்று ஸ்பெஷலாக கொண்டு வந்திருக்கிறேன், பார்க்கிறீர்களா?"

"அப்படியா, ரொம்ப மகிழ்ச்சி, கீதாராணி. நீங்க உணவு இடைவேளையில் வந்தால் சரியாக இருக்கும். ஏன் என்றால்  இது கஸ்டமர்கள் வரும் நேரம் பாருங்கள்."

"சரிம்மா, நான் வெயிட் பண்ணுகிறேன்". கீதாராணி, பெயிண்ட் வாசனை இன்னும் குறையாத புது சோபா மீது அமர்கிறார்.
அதற்குள் மைனாவதி சரவணா பவனிலிருந்து கை நிறைய அள்ளிக்கொண்டு வருகிறார்.

மேனேஜரம்மாவும் சாந்தியும் பொங்கல் சாப்பிட்டு 'என்ன அருமையான சுவை' என்று பிரமித்து விட்டு, காப்பியும் முடித்த பின், விஷயத்திற்கு வருகிறார்கள்.

"சாந்தி, நீங்கள் என்ன கடை துவங்கப்போகிரீர்கள்?"

"தி. நகரில் என் மாமியாரின் ஒன்று விட்ட சகோதரனுக்கு 300 சதுர அடியில் ஒரு இடம் இருக்கிறது. அதில் நான் ரெடிமேடு வியாபாரம் செய்யலாமென்று இருக்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?"

"ஆஹா, அருமையான யோசனை. தி. நகரை விட்டால் சென்னையில் வேறு எங்கு வியாபாரம் நடக்கும்? வாழ்த்துக்கள்."

"நன்றி அம்மா. உங்கள மாதிரி வங்கி மேனேஜரம்மாக்கள் இருந்தால் பிரச்சினையே இல்லை, போங்கள்."

"கடைக்கு என்ன பெயர் வைக்கப்போகிறீர்கள்?"

"எங்க வூட்டுக்காரருக்கு குலதெய்வம் முனீஸ்வரன்  என்கிறதாலே, முனீஸ்வரா  ரெடிமேட் என்று பேரு செலக்ட் பண்ணியிருக்கோம்"

"என்னது! இது பெண்களுக்காக மட்டுமே ஏற்பட்ட வங்கி. ஆண்கள்  பெயரில் கடை வைத்தால் லோன் கொடுக்க வழியில்லை."

"அய்யய்யோ, அப்படி சொல்லி விடாதீர்கள். வேண்டுமானால் பேரை முநீஸ்வரம்மா ரெடிமேட் என்று மாற்றிவிடுகிறேன்."

"அது தான் நல்லது. சரி, கடையில் என்னென்ன ஐட்டங்கள்  விற்கப்  போகிறீர்கள்?"

"எல்லா வகையான ரெடிமேடும் தான். முக்கியமாக, பத்து வயதுக்கு  உட்பட்ட ஆண், பெண்  குழந்தைகளுககான ஆடைகள் விற்பதாக இருக்கிறோம். போகப்போக எல்லா வயதினருக்கும் வேண்டிய ஐட்டங்கள் கொண்டு வருவோம்".

"வெயிட், வெயிட்" என்று அலறினார்  மேனேஜரம்மா. "நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்? மகளிர் வங்கியில் கடன் வாங்கி, ஆண்களுக்கான ஆடைகள்  விற்பதா? மேலிடத்துக்குத்
தெரிந்தால் எனக்கு வேலை பொய் விடும்,   தெரியுமா ?  முழுக்க  முழுக்க பெண்களுக்கான ஆடைகள் மட்டுமே விற்பதாக இருந்தால் மட்டுமே  நாங்கள் பைனான்ஸ் பண்ண முடியும். புரிந்ததா?"

சாந்திக்குப் புரிந்தது. "அதாவது, பெண்களின் ஆடைகளுக்கு மட்டும் உங்கள் வங்கியில் கடன் தருவீர்கள். அப்படி என்றால் ஆண்களின் உடைகளுக்கு யார் கடன் தருவார்கள்?"

"அதற்குத் தான் ஸ்டேட்  பேங்க்கு , இந்தியன் பேங்க்க்கு எல்லாம் இருக்கிறதே!"

சாந்திக்கு மேலும் ஒரு கேள்வி இருந்தது. "மேனேஜரம்மா கோபித்துக் கொள்ளக் கூடாது. முதலில் உங்களிடம் லோன் வாங்கிவிட்டு இந்தியன் பேங்க்குக்குப் போகணுமா , இல்லை அங்க வாங்கிய பிறகு உங்களிடம் வரணுமா ?"

"புத்திசாலி நீ, சாந்தி. முதலில் இந்தியன் பேங்க்கிலோ அல்லது வேறு  எந்த பேங்க்கிலோ  ஆண்கள்  உடைகளுக்காக லோன்  வாங்கிவிடு. அப்புறம் அந்த சாங்ஷன் லெட்டருடன் இங்க வா. ஒரே நாளில்  முடிச்சு கொடுத்திருவோம்." என்று உற்சாகமாக விடை கொடுத்தார் மேனேஜரம்மா.

கீதாராணி மெல்ல நெளிந்தாள். "அம்மா, அப்பளம்.." என்று இழுத்தாள்.

"இங்க பாரம்மா, எனக்கு பிசினஸ் தான் முதலில். அப்பளம் எல்லாம் அப்புறம் தான் தெரிந்ததா. நீ தான் பார்த்துக் கொண்டிருந்தாயே, ஒரு கஸ்டமருக்கு லோன்  சாங்ஷன் செய்வதற்கு எவ்வளவு  கஷ்டப்பட வேண்டியிருக்கிறது."

" இப்படியெல்லாம் ரொம்ப கஷ்டப்பட வேண்டாம் அம்மா. நமக்கு என்ன கிரீடமா தரப்போகிறார்கள்" என்று அனுதாபப் பட்டாள் மைனாவதி. அதற்கு அர்த்தம், ஓடிப்போய் ஒரு தயிர் வடை செட் வாங்கி வரட்டுமா- உங்களுக்கு ஒன்று, எனக்கு ஒன்று?

"கீதாராணிக்கும் ஒன்று வாங்கி வா. பாவம் ரொம்ப நேரமாக வெயிட் பண்ணுகிறாள்."
**********
(C) Y.Chellappa.
email: chellappay@yahoo.com

குறிப்பு:எனது இன்னொரு வலைப்பூவான செல்லப்பா தமிழ் டயரி படித்தீர்களா?


2 கருத்துகள்:

  1. 48 மணி நேரத்திற்குள் கடன் வாங்கவும்

    நல்ல நாள்

    நீங்கள் ஒரு தொழிலதிபர் இருக்க வேண்டும், ஒரு திட்டம் தொடங்க அல்லது ஒரு அபார்ட்மெண்ட் வாங்க அல்லது நீங்கள் எந்த நிதி சிரமம் இருந்தால், உங்கள் உதவி இப்போது வருகிறது, நீங்கள் கடன் பெற முயற்சி இழந்துவிட்டாய், உங்கள் கனவுகள் இறக்க விட வேண்டாம், தொடர்பு திரு ஃப்ரெட் லாரி, ஒரு விரைவான மற்றும் நம்பகமான கடன்.

    கீழே கொடுக்கப்பட்டுள்ள கடன் வகைகளை நாங்கள் வழங்குகிறோம்:

    1 நிறுவனத்தின் கடன்
    2. வணிக கடன்
    3. குடியிருப்பு கடன்
    4. ஆட்டோ கடன்
    5. கார் கடன்

    நாங்கள் 3,000 வட்டி விகிதத்தில் 100,000.00 யூரோ இருந்து 500,000,000,000.00 வரை எங்களுக்கு உதவ தயாராக இருக்கும் தீவிர மற்றும் நேர்மையான வாடிக்கையாளர்களுக்கு கடன்களை வழங்குகிறோம்.

    எங்கள் மின்னஞ்சல் (fredlarryloanfirm@gmail.com) அல்லது (fredlarryloanfirm@hotmail.com) வழியாக விரைவாக எங்களை தொடர்பு கொள்க.

    Whatssap எண்: +2347061892843
    ஸ்கைப்: fredlarry12

    கையொப்பமிடப்பட்ட
    மேலாளர்
    திரு ஃப்ரெட் லாரி

    பதிலளிநீக்கு
  2. 48 மணி நேரத்திற்குள் கடன் வாங்கவும்

    நல்ல நாள்

    நீங்கள் ஒரு தொழிலதிபர் இருக்க வேண்டும், ஒரு திட்டம் தொடங்க அல்லது ஒரு அபார்ட்மெண்ட் வாங்க அல்லது நீங்கள் எந்த நிதி சிரமம் இருந்தால், உங்கள் உதவி இப்போது வருகிறது, நீங்கள் கடன் பெற முயற்சி இழந்துவிட்டாய், உங்கள் கனவுகள் இறக்க விட வேண்டாம், தொடர்பு திரு ஃப்ரெட் லாரி, ஒரு விரைவான மற்றும் நம்பகமான கடன்.

    கீழே கொடுக்கப்பட்டுள்ள கடன் வகைகளை நாங்கள் வழங்குகிறோம்:

    1 நிறுவனத்தின் கடன்
    2. வணிக கடன்
    3. குடியிருப்பு கடன்
    4. ஆட்டோ கடன்
    5. கார் கடன்

    நாங்கள் 3,000 வட்டி விகிதத்தில் 100,000.00 யூரோ இருந்து 500,000,000,000.00 வரை எங்களுக்கு உதவ தயாராக இருக்கும் தீவிர மற்றும் நேர்மையான வாடிக்கையாளர்களுக்கு கடன்களை வழங்குகிறோம்.

    எங்கள் மின்னஞ்சல் (fredlarryloanfirm@gmail.com) அல்லது (fredlarryloanfirm@hotmail.com) வழியாக விரைவாக எங்களை தொடர்பு கொள்க.

    Whatssap எண்: +2347061892843
    ஸ்கைப்: fredlarry12

    கையொப்பமிடப்பட்ட
    மேலாளர்
    திரு ஃப்ரெட் லாரி

    பதிலளிநீக்கு