தமிழ்ப் புத்தாண்டன்று (14-4-2013) சென்னையில் காலமானார், 82 வயதான பாடகர், திரு பி. பி. ஸ்ரீனிவாஸ் அவர்கள்.
திரைப்படத்துறையில் இருப்பவர்களைப் பற்றி அனைவருக்கும் நல்ல அறிமுகம் இருக்கும். அதிலும், தமிழ் நாட்டில் டி.எம்.எஸ்., சீர்காழி, பி.பி.எஸ் என்ற மும்மூர்த்திகளைத் தெரியாதவர்கள் இருக்கமுடியுமா? இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு தமிழ்த் திரையிசை என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டால், இந்த மூவரை விட ஆளுமை நிறைந்த பாடகர்களை நாம் காண்பது அரிது.
மற்ற இருவரும் தமிழ் நாட்டில் பிறந்து தமிழ் படித்துப் பாடகர்களானவர்கள். ஸ்ரீனிவாசோ, தெலுங்கராகப் பிறந்து, கன்னடத்தில் புகழ் பெற்று, அதன் பின் தமிழுக்கு வந்தவர். ஆனால் சென்னையிலேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டது மட்டுமல்ல, தமிழுக்கு நிரந்தரமான பாடல்களையும் தந்தவர்.
திரைப்படத்துறையில் இருப்பவர்களைப் பற்றி அனைவருக்கும் நல்ல அறிமுகம் இருக்கும். அதிலும், தமிழ் நாட்டில் டி.எம்.எஸ்., சீர்காழி, பி.பி.எஸ் என்ற மும்மூர்த்திகளைத் தெரியாதவர்கள் இருக்கமுடியுமா? இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு தமிழ்த் திரையிசை என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டால், இந்த மூவரை விட ஆளுமை நிறைந்த பாடகர்களை நாம் காண்பது அரிது.மற்ற இருவரும் தமிழ் நாட்டில் பிறந்து தமிழ் படித்துப் பாடகர்களானவர்கள். ஸ்ரீனிவாசோ, தெலுங்கராகப் பிறந்து, கன்னடத்தில் புகழ் பெற்று, அதன் பின் தமிழுக்கு வந்தவர். ஆனால் சென்னையிலேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டது மட்டுமல்ல, தமிழுக்கு நிரந்தரமான பாடல்களையும் தந்தவர்.