சனி, ஆகஸ்ட் 31, 2013
திங்கள், ஆகஸ்ட் 26, 2013
கண்ணே கலைமானே (சிறுகதை)
கண்ணே கலைமானே
இமயத்தலைவன்
இமயத்தலைவன்
நியூஜெர்சியில் பிரபலமான
உயர்நிலைப்பள்ளி அது. இரண்டாவது,
மூன்றாவது கிரேடு மாணவர்களின் பெற்றோர்கள் குழுமியிருந்தனர். வரப்போகும் ஆண்டு
விழாவை வித்தியாசமாகக் கொண்டாடுவதற்கான கருத்துக் கேட்கும் கூட்டம்.
இரண்டாவது படிக்கும்
சகுந்தலா என்கிற ‘ஷக்’ குடன் தாயார் இந்திராவும், ‘அமெரிக்கால பள்ளிக்கூடம்னா
எப்படி யிருக்கும்னு பாக்கணும்’ என்று பாட்டி ராஜம்மாவும் வந்திருந்தனர்.
பள்ளி முதல்வர் மிஸ்.
சாம்சன் அனைவரையும் வரவேற்றார். “இந்த வருடம் ஆண்டு விழாவிற்கு நமது கவர்னரை
அழைப்பதாக இருக்கிறோம். அதனால் விழா மிகவும் சிறப்பாக மட்டுமின்றி
வித்தியாசமாகவும் இருக்கவேண்டும். அதற்கான ஆலோசனைகளை வரவேற்கிறேன்” என்றார்.
திங்கள், ஆகஸ்ட் 05, 2013
தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்
தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் குளம் |
தாத்தாவின் முகமே
இப்போது மறந்துவிட்டது. (அம்மாவின் அப்பா). இறந்து போய் முப்பத்தாறு வருடங்கள் ஆகிவிட்டது.
அவரை முதன்முதலில் பார்த்தபோது எனக்கு வயது ஐந்தரை அல்லது ஆறு இருக்கலாம்.
அன்று மாலை ஐந்து
மணிக்கே அம்மா சூடாகச் சமைத்துக் கொண்டிருந்தாள். புளிசாதமும் உருளைக்கிழங்கு
பொடிமாசும். மணம் தெருவைக் கூட்டியது. ராத்திரி ஊருக்குப் போகிறோம் என்றார் அப்பா.
எந்த ஊர் என்று கேட்கவில்லை. தாத்தா ஊர் தான் என்று தெரியும். இரண்டு வருடங்களாக
அம்மா சொல்லிக் கொண்டிருந்தாள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)