ஞாயிறு, நவம்பர் 17, 2013

அன்னை அன்னை அன்னை என்று என்றும் பாடுவோம்! (கவிதை)

(பாண்டிச்சேரியில் அமைதித்துயில் கொண்டிருக்கும் ஸ்ரீ அரவிந்த அன்னையின் சமாதி தினம் இன்று (நவம்பர் -17).  தமிழ்நாட்டில் பல இடங்களில் இயங்கிவரும் அன்னை தியான மையங்களில் பாடுவதற்காக நான் பல ஆண்டுகள் முன்பு எழுதிக்கொடுத்த பாடல் இது. அன்னைக்கு மீண்டும் சமர்ப்பணம்.)
படம்-நன்றி: ஸ்ரீ அரவிந்த ஆசிரமம்

அன்னை அன்னை அன்னை என்று
என்றும் பாடுவோம்!
அன்னை பெற்ற பிள்ளைகள் நாம்
ஒன்று கூடுவோம்!

 ஆதி என்றும் அந்தம் என்றும்
அற்ற பரம்பொருள் – நம்
அறிவு ஞானம் எல்லாம் கடந்த
வேத விழுப்பொருள்
வாழ்வனைத்தும் யோகம் என்று
காட்டும் கருப்பொருள் – மனித
வடிவில் வந்து நம்மிடையில்
இருந்த பேரருள்!
படம்-நன்றி: ஸ்ரீ அரவிந்த ஆசிரமம்

 வங்கம் விட்டு இங்கு வந்த
தேவ தாமரை – வீட்டு
வாசல் தேடி ஓடி வந்த
தேவ சூரியன்!
பொங்கி மின்னும் அலைகள் வீசிப்
பொலியும் பாண்டியில்
புதைந்திருக்கும் மனம் கடந்த
ஞானப் பொக்கிஷம்! 
படம்-நன்றி: ஸ்ரீ அரவிந்த ஆசிரமம்
அன்னை என்னும் இவரை நாடத்
தடைகள் இலையே!
அன்பு நெஞ்சம் அன்றி வேறு
தகுதி இல்லையே!
பூசை என்றும் வேள்வி என்றும்
முறைகள் இல்லையே – நீ
புரியவேண்டும் சரணாகதி,
வேறு இல்லையே! 
படம்-நன்றி: ஸ்ரீ அரவிந்த ஆசிரமம்
கலங்கிடாத பக்தி கொண்ட
எண்ணம் போதுமே!
கருத்தினிலே சோர்வில்லாத
கடமை போதுமே!
கள்ளமற்ற வெள்ளை உள்ளம்
ஒன்று போதுமே-
கருணைத்தேரில் அன்னை காட்சி
வந்து சேருமே!
     -கவிஞர் இராய செல்லப்பா

(c) Y. Chellappa

சனி, நவம்பர் 02, 2013

தெய்வக் குற்றத்தைத் தவிர்க்கச் சில புகைப்படங்கள்

தீபாவளித் திருநாளிலும் எழுதியே 'போர்' அடிப்பது தெய்வக்குற்றம் ஆகலாம் என்பதால் இன்று நான் எடுத்த (நானே எடுத்த!) சில புகைப்படங்களைப் பகிர்ந்துகொள்கிறேன். அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

அரவிந்தர் - டில்லி ஆசிரமத்தில்

 
         பூனை குறுக்கே போவது-சென்னை 'உதவும் கரங்கள்' திருவேற்காடு


    குளு-மணாலி வழியில் வெந்நீர் ஊற்றில் சோறு சமைக்கும் காட்சி


             குளு-மணாலி வழியில் எதிரும் புதிருமாக லாரிகள்

    அதே வழியில்: தலையைத் தொடும் மரங்கள், வானைத் தொடும் மலைகள்
                   
                                சண்டிகர் - கல் தோட்டம் (முதுகு என்னுடையது!)


                           சண்டிகர் - கல் தோட்டம் - இன்னொரு காட்சி

                       தாஜ்மஹாலில் இருந்து பார்த்தால் யமுனை நதி


                உள்ளிருந்து அண்ணாந்து பார்த்தால் - தாஜ்மஹால்

                                                       திருச்செந்தூர் -2004 இல்
                              திருப்பதி மலை- நடைபாதையில் மான்கள்


மாலையில் - பனிப்படலத்தின் நடுவே டில்லி சூரியன்
 
அதே மாலையின் இன்னொரு தோற்றம்

குடையில் ஒரு குடித்தனம்? மும்பை நாரிமன் பாயிண்ட்டில்

ஹரித்வார் போகும் வழியில் ஒரு காட்சி

 (c) Y Chellappa
email: chellappay@yahoo.com