ஆர்க்கிட் பூக்கள் திருவிழா
2013 மார்ச் 12 - செவ்வாய்க்கிழமை யன்று நியூயார்க் தாவரவியல் பூங்காவுக்குப் போக வேண்டுமென்று முதல் நாளே முடிவு செய்திருந்தோம். ஆனால் காலையிலிருந்தே மழை பொழிய ஆரம்பித்துவிட்டது. (சனி, ஞாயிறு, திங்கள் நல்ல வெயில் இருந்தது). கிளம்பும் போது பத்தே முக்கால் ஆகிவிட்டது. மழை நின்றபாடில்லை.
சென்னை மாதிரி, பத்து நிமிடம் மழை பெய்தாலே ஊரெங்கும் தண்ணீர், சாலையெங்கும் போக்குவரத்து நெரிசல் என்பதெல்லாம் இங்கு இல்லை. எவ்வளவு மழை வந்தாலும் நீர் உடனே வடிந்து விடுகிறது. எனவே காரோட்டிகளுக்குக் கவலையில்லை.

தாவரவியல் பூங்காவில் அன்று "ஆர்க்கிட் பூக்கள்" திருவிழா. பல்வேறு வகையான ஆர்க்கிட் பூக்கள், அமெரிக்கா மட்டுமின்றி வேறு நாடுகளிலிருந்தும் தருவிக்கப் பட்டிருந்தன. அழகான கண்ணாடி மாளிகையில் கண்ணைக் கவரும் விதத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

(பூங்காவிலேயே ஆர்க்கிட் செடி வளர்ப்புக்கான தனி மாளிகை
இருந்தது). ஒவ்வொரு பூச்செடி அருகிலும்
அதன் பெயரும், தாவரவியல் பெயரும், அதிகம் வளரும் நாடுகளின் பெயர்களும்
சிறு அட்டையில் தரப்பட்டிருந்தன.



(நம்ம ஊர் சங்குப்பூவும் ஆர்க்கிட் வரிசையில் அங்கே இடம் பெற்றிருந்தது!)
(ஆர்க்கிட் பூக்களைத் தான் 'சிங்கப்பூர் ரோஜா' என்று பூக்காரி ஜமுனா விற்கிறாள் என்ற புதிய தகவல் விஜியிடமிருந்து வந்தது).
அநேகமாக எல்லாப் பூக்களையும் பார்த்து முடித்தபோது வெளியில் மழை சிறு தூறலாகத் தணிந்திருந்தது.


படித்தவரான விஜிக்கு ஒவ்வொரு பூக்களுமே குறைந்தது அரை மணி நேர கவனிப்புக்கு உரியதாகப் பட்டது. இதைப் பார்த்தீர்களா, அதைப் பார்த்தீர்களா என்று முடுக்கிகொண்டே இருந்தார்.

பார்த்த அனுபவத்தை விட இன்னும் பார்க்க முடிய வில்லையே என்ற ஏக்கம் அதிகமாக, மாலை ஆறு மணிக்கு விடை பெற்றோம். மீண்டும் பார்த்தசாரதி யானார், ஜார்ஜ். நியூஜெர்சியை நோக்கியது பயணம்.
(c) Y.Chellappa.
email: chellappay@yahoo.com
ஆர்க்கிட் தோட்டத்திற்கு அழைத்துச்சென்றதற்கு நன்றிகள்..
பதிலளிநீக்குhttp://jaghamani.blogspot.com/2013/03/blog-post_7381.html
அழகின் சிரிப்பு -அனுமன் ஆர்க்கிட்மலர்கள்..