செவ்வாய், ஏப்ரல் 16, 2013

வேர்வை கவிதையடா (5)


அய்யா வரச் சொன்னதாய்
ஆள் வந்து கூப்பிடுவான்!
 
கூட இருப்பவர்கள்
கூடவந்து பேசாரோ?
ஏதோ
 
நடக்காத விபரீதம்
நடந்துவிட்ட பாவனையில்
அவளவளும் தன்பணியில்
அக்கறைபோல் இருந்திடுவாள்
 
கடைசி இருக்கைக்
காரி, யின்று வரவில்லை
இருந்தால் அவள் நாலு
இதமாய்க் கூறிடுவாள்....
 
‘அய்யா கூப்பிடறார்’
ஆள் மீண்டும் நினைவூட்டல்!
 
பொங்கிவரும் கோபம்
பொறுமிவரும் விம்மல்
அரை நிமிடம் போனால்
அழுகைவரும் போல் அச்சம்
 
ஒரு
 
பத்து நிமிடம்
பொறுக்க முடியாதா?
 
 
பத்து வருடம்
பணிபுரிந்து வருகின்றேன்
தாமதமாய்
 
எத்தனை நாள்வந்தேன்
இவர்களுக்குத் தெரியாதா?
 
அவமானப்படுதுதல்போல்
‘ஆப்செண்ட்’ போடுவதா?
 
அவசர வேலையென்றால்
ஆறுமணி ஏழுமணி
எட்டுமணி கூட
இருந்து உழைத்திருப்பேன்,
எனக்கா இந்த நிலை?
 
ஆத்திரமாய்ச் சீறிவரும்
அடிபட்ட நெஞ்சம்; போய்
அதிகாரி முகத்தில்
அறைந்துவிட உந்தல்வரும்.
 
தாமதத்தின் காரணத்தைத்
தானே எடுத்துரைத்து
‘ஸாரி’ சொல்ல முடியாமல்
மனத்திற்குள் மானப்போர்!
 
ஓடினாள், தாளெடுத்தாள்,
தட்டெழுத்தில்
கை பதித்தாள்:

 

1 கருத்து:

  1. நானும் பணிஓய்வு பெற்றவள். நிஜமாகவே இப்படித்தான் தோன்றும். எவ்வளவு நாள் லேட்டாக வீடு செல்கிறோம். ஒரு நாள் லேட்டாக வந்ததற்கு இப்படியா கேட்பார்கள் ? அப்படியே பணிபுரியும் மகளிர் மனதை பிரதியெடுத்து வைத்தார் போல் இருக்கிறது கவிதை.

    பதிலளிநீக்கு