(பாண்டிச்சேரியில் அமைதித்துயில் கொண்டிருக்கும் ஸ்ரீ அரவிந்த
அன்னையின் சமாதி தினம் இன்று (நவம்பர் -17). தமிழ்நாட்டில் பல இடங்களில் இயங்கிவரும் அன்னை
தியான மையங்களில் பாடுவதற்காக நான் பல ஆண்டுகள் முன்பு எழுதிக்கொடுத்த பாடல் இது. அன்னைக்கு மீண்டும் சமர்ப்பணம்.)
அன்னை பெற்ற பிள்ளைகள் நாம்
ஒன்று கூடுவோம்!
ஆதி என்றும் அந்தம் என்றும்
அற்ற பரம்பொருள் – நம்
அறிவு ஞானம் எல்லாம் கடந்த
வேத விழுப்பொருள்
வாழ்வனைத்தும் யோகம் என்று
காட்டும் கருப்பொருள் – மனித
வடிவில் வந்து நம்மிடையில்
இருந்த பேரருள்!
வங்கம் விட்டு இங்கு வந்த
தேவ தாமரை – வீட்டு
வாசல் தேடி ஓடி வந்த
தேவ சூரியன்!
பொங்கி மின்னும் அலைகள் வீசிப்
பொலியும் பாண்டியில்
புதைந்திருக்கும் மனம் கடந்த
ஞானப் பொக்கிஷம்!
தடைகள் இலையே!
அன்பு நெஞ்சம் அன்றி வேறு
தகுதி இல்லையே!
பூசை என்றும் வேள்வி என்றும்
முறைகள் இல்லையே – நீ
புரியவேண்டும் சரணாகதி,
வேறு இல்லையே!
எண்ணம் போதுமே!
கருத்தினிலே சோர்வில்லாத
கடமை போதுமே!
கள்ளமற்ற வெள்ளை உள்ளம்
ஒன்று போதுமே-
கருணைத்தேரில் அன்னை காட்சி
வந்து சேருமே!
-கவிஞர் இராய செல்லப்பா
(c) Y. Chellappa
email: chellappay@yahoo.com
படம்-நன்றி: ஸ்ரீ அரவிந்த ஆசிரமம்
அன்னை அன்னை அன்னை என்று
என்றும் பாடுவோம்!அன்னை பெற்ற பிள்ளைகள் நாம்
ஒன்று கூடுவோம்!
அறிவு ஞானம் எல்லாம் கடந்த
வேத விழுப்பொருள்
வாழ்வனைத்தும் யோகம் என்று
காட்டும் கருப்பொருள் – மனித
வடிவில் வந்து நம்மிடையில்
இருந்த பேரருள்!
படம்-நன்றி: ஸ்ரீ அரவிந்த ஆசிரமம்
வாசல் தேடி ஓடி வந்த
தேவ சூரியன்!
பொங்கி மின்னும் அலைகள் வீசிப்
பொலியும் பாண்டியில்
புதைந்திருக்கும் மனம் கடந்த
ஞானப் பொக்கிஷம்!
படம்-நன்றி: ஸ்ரீ அரவிந்த ஆசிரமம்
அன்னை என்னும் இவரை நாடத் தடைகள் இலையே!
அன்பு நெஞ்சம் அன்றி வேறு
தகுதி இல்லையே!
பூசை என்றும் வேள்வி என்றும்
முறைகள் இல்லையே – நீ
புரியவேண்டும் சரணாகதி,
வேறு இல்லையே!
படம்-நன்றி: ஸ்ரீ அரவிந்த ஆசிரமம்
கலங்கிடாத பக்தி கொண்ட எண்ணம் போதுமே!
கருத்தினிலே சோர்வில்லாத
கடமை போதுமே!
கள்ளமற்ற வெள்ளை உள்ளம்
ஒன்று போதுமே-
கருணைத்தேரில் அன்னை காட்சி
வந்து சேருமே!
-கவிஞர் இராய செல்லப்பா
அன்னையைப் போற்றும் அழகிய கவிதைக்குப் பாராட்டுக்களும்
பதிலளிநீக்குவாழ்த்துக்களும் .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .
அன்புக்கும் வருகைக்கும் நன்றி!
நீக்குஞானப் பொக்கிஷம்! அருமையான அன்னையின்
பதிலளிநீக்குபாடல்பற்றி சிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி!
நீக்குஅன்னையைப் போற்றுவோம் அன்பினால் வாழ்த்துவோம்
பதிலளிநீக்குஆம் ஐயா! அன்னையை அனைத்து ஆக்க சக்திக்கும் உறைவிடம் என்று அரவிந்தர் கூறுகிறார். அன்னையைப் போற்றுதல் நம் அறிவுத்தேடலுக்கு ஆர்வம் மிக்க ஊக்கத்தை அளிக்கும் என்பது கண்கூடு.
நீக்குவங்கம் விட்டு இங்கு வந்த
பதிலளிநீக்குதேவ தாமரை – வீட்டு
வாசல் தேடி ஓடி வந்த
தேவ சூரியன்!..
அன்னையின் நினைவைப்போற்றும் அழகிய பாடல்.
மனதைக் கொள்ளை கொண்டது!..
சிறப்பான பகிர்வு!..
தேவ தாமரை என்பது அரவிந்தரை. தேவ சூரியன் என்பது அன்னையை. தங்கள் வருகை நன்றிக்குரியது.
நீக்குசிறப்பான பகிர்வு ஐயா... வாழ்த்துக்கள்... நன்றி...
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி ஐயா! (தங்கள் மடிக்கணினியின் ஆரோக்கியம் திரும்பியிருக்கும் என்று நம்புகிறேன்.)
நீக்குகவிதை நன்றாக உள்ளது பாராட்டுக்கள்
பதிலளிநீக்குவாழ்த்துக்கு நன்றி!
நீக்குசிறப்புப்பதிவு வெகு வெகு அருமை
பதிலளிநீக்குபதிவாக்கி அறியத் தந்தமைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
வருகைக்கு நன்றி ஐயா!
நீக்குtha.ma 2
பதிலளிநீக்குஅன்னையைப் போற்றி அருமையான பாடல் ஐயா!
பதிலளிநீக்குஉள்ளமதில் அமைதியின் சின்னமாகிய அன்னையின் நினைவோடு
மிகச் சிறப்பான கவி தந்திருக்கின்றீர்கள்.
பகிர்விற்கு மிக்க நன்றி ஐயா!
வாழ்த்துக்கள்!
த ம.5
தங்கள் வருகை மகிழ்வூட்டுகிறது. நன்றி!
நீக்குசிறப்பான பதிவு ஐயா.
பதிலளிநீக்குஅன்புருவானவருக்கு
அருமையான
கவிதை.
நன்றி ஐயா
மிக்க நன்றி நண்பரே!
நீக்குஅன்னைக்குப் பாமாலை! வாடாத புகழ்மாலை!
பதிலளிநீக்குவருகையால் மகிழ்ந்தேன் ஐயா!
நீக்குநீங்கள் எழுதிக் கொடுத்த பாடல் பாடப் படுகிறது என்று அறிந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி. அன்னைக்கு சூட்டிய பாமாலை நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா!
பதிலளிநீக்கு//////கள்ளமற்ற வெள்ளை உள்ளம்
பதிலளிநீக்குஒன்று போதுமே-
கருணைத்தேரில் அன்னை காட்சி
வந்து சேருமே!//////
அற்புதமான வரிகள். பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி!!