துவக்கப் பள்ளியில்
கரும்பலகை உமிழும் சாக்குத்தூளாய்
சாலை யோரத்தில்
பனித்துகள்.
ஊசியிலை மரம்.
கறுப்பு மண்ணாய்ப்
பொலிவிழந்து நிற்கும்
புல்தரை.
குளிர்காற்று.
டேஃபடில்ஸ் அரும்பு
வசந்தம்.
பங்க்சுட்டானியின்
காட்டுப்பன்றி?
- கவிஞர் இராய. செல்லப்பா
கரும்பலகை உமிழும் சாக்குத்தூளாய்
சாலை யோரத்தில்
பனித்துகள்.
எலும்புக் கூடாய் நிற்கும்
இலையுதிர்த்த ஊசியிலை மரம்.
கறுப்பு மண்ணாய்ப்
பொலிவிழந்து நிற்கும்
புல்தரை.
பகல் சூரியனிலும்
காதைத் திருகும்பங்க்சுட்டானி காட்டுப்பன்றி |
உறங்கியும் உறங்காமலும்
மௌனிக்கின்றதுடேஃபடில்ஸ் அரும்பு
தாமதமாகத்தான் வருமாம்
இவ்வருடத்துவசந்தம்.
தன் நிழலைப் பார்க்காமலே
ஒளிந்துகொண்டதாமேபங்க்சுட்டானியின்
காட்டுப்பன்றி?
- கவிஞர் இராய. செல்லப்பா
(குறிப்பு: ஃபிலடெல்பியாவில் பங்க்சுட்டானி (Punxsutawney) என்ற இடத்தில் ஒவ்வோராண்டும் ஃபிப்ரவரி 2 ம் நாள், (அதாவது, குளிர்காலத்தில்) “காட்டுப்பன்றி தினம்” (Ground Hog’s Day) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், வளையைவிட்டு வெளியில் எடுக்கப்படும் ‘பில்’ என்னும் காட்டுப்பன்றி, தன் நிழலைப் பார்க்க பயந்து வளைக்குள் ஓடி ஒளிந்துகொண்டால், குளிர் காலம் மேலும் ஆறு வாரங்கள் நீடிக்கும் என்றும், மாறாக, நிழலைப் பார்த்தும் ஓடாமல் இருந்தால், வசந்த காலம் விரைவில் வந்துவிடும் என்றும் கருதுகிறார்கள்).
(c) Y.Chellappa
email: chellappay@yahoo.com
குறிப்பு:எனது இன்னொரு வலைப்பூவான செல்லப்பா தமிழ் டயரி படித்தீர்களா?
ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு நம்பிக்கை
பதிலளிநீக்குஆம், அதுவும் ஒரு காட்டுப்பன்றியின் மீது! மனிதர்கள் எங்கிருந்தாலும் மனிதர்கள் தானே!
பதிலளிநீக்குவியக்க வைக்கும் நம்பிக்கை...
பதிலளிநீக்குநம்பிக்கை ஊக்கம்தரும் வீண்போகாது
பதிலளிநீக்குநன்றி நண்பர்களே! கடந்த 90 வருடங்களில் வசந்தத்தின் வரவு, இந்த விலங்கு சொன்னபடி தான் பெரும்பாலும் நடந்திருக்கிறதாம்! “Ground Hog’s Day” என்ற ஆங்கிலப் படத்தை முடிந்தால் பார்க்கவும்.
பதிலளிநீக்கு" பில் " தன நிழலைப் பார்த்து பயப்படாமல் இருக்க வேண்டிக்கொள்ள வேண்டும் போலிருக்கிறது.
பதிலளிநீக்குநாம் தான் டாக்டர் பில்லைப் பார்த்துப்
பயப்படுகிறோம் என்றால் பில்லிற்கே பயமா?
வசந்தத்திற்கு ஏங்கும் அருமையான கவிதை...கிட்டத்தட்ட அதே நேரத்தில் நானும் அதையே எழுதியிருக்கிறேன், வசந்தமே நீ வாராயோ என்று! இந்த வருடம் அனைவரையும் ஏங்க வைத்துவிட்டது வசந்தம்!
பதிலளிநீக்குவசந்தமே நீ வாராயோ-http://thaenmaduratamil.blogspot.com/2013/04/vasandhame-nee-vaaraayo.html
பதிலளிநீக்கு