செவ்வாய், ஏப்ரல் 16, 2013

வேர்வை கவிதையடா -(1)


ஒரு நடுத்தரக் குடும்பம்
அவனும்
அவளும்.
 
பள்ளி செல்லும்
ஒரு சிறுவன்.
 
அரசுப் பணியில்
அவள்.
ஒரு நாள்
காலை எட்டுமணிக்
காட்சி யிது...
 
முன் இரவில்,
டி.வி.யில்
 
காட்சி முடியும்வரை
கண்விழித்த பிள்ளையவன்
எழுந்ததே தாமதம்,
 
ஏசி, ஓர் அடி கொடுத்து,
குளியல் அறையில்
கூட்டிவந்து நிற்கவைத்து,
 
இடையில்
எழுந்துபோய்
இவனுக்காய்ப் பசும்பாலைப்
பாத்திரத்தில் இட்டுப்
பதமாய் நிற்கவைத்து
எரிவாயு மூட்டிவந்து
 
சோப் எடுக்கக் குனிந்தால்
 
பிள்ளையிவன் கையிரண்டில்
தானே எடுத்துத்
தலையிலிட்டு நுரையெல்லாம்
 
 
கண்ணில் தடவிக்
கண்ணெரிச்சல் தாளாமல்
‘அம்மா’ என்றலற,
 
‘அது தானே உன்பழக்கம்’
என்றிவளும் பாய,
 
இடையினிலே சோப் நழுவிக்
கழிவுப் பாதையிலே
காணாமல் மறைந்து விட,
 
ஆத்திரத்தில்,
 
பச்சை நீரைப்
பதமாய்க் கலக்காமல்
சுடு நீரை ஊற்றிவிட,
குழந்தை துள்ளியழ,
 
‘சாரி கண்ணா’ சொல்லி,
சரிப்படுத்திக் குளிப்பாட்டி,
 
அதன் நடுவே கூடத்தை
அவ்வப் பொழுது
அண்ணாந்து மணிபார்த்து
 
‘ஹிந்து’ கடன் கேட்டு
எதிர்வீட்டு மாமா
வருவாரோவென்று
வாசல்மணி பார்த்து,
 
சீருடை போட்டுச்
சிறிதாய்த் தலை வாரி,
அங்குலத் திருநீறு
அழகாய்த்தான் பூசி,
புருவத்தை

2 கருத்துகள்:

  1. அப்படித்தான் இருக்கிறது... வரிகள் முழுமை அடைந்து விட்டது தானே...?

    பதிலளிநீக்கு
  2. இல்லை, நண்பரே! மொத்தம் 6 பகுதிகள் உள்ளன. ஒரே பக்கத்தில் அடுத்தடுத்து பிரதியிட்டால், வடிவம் சிதறிவிடுகிறது. (Formatting breaks down!). எனவே வேறு வழியில்லாமல் 6 தனித்தனி பக்கங்களாகக் கொடுக்கவேண்டி வருகிறது. சிரமம் பார்க்காமல் (இந்த முறை) படித்துவிடுங்கள்! நன்றி.

    பதிலளிநீக்கு