செவ்வாய், ஏப்ரல் 16, 2013

வேர்வை கவிதையடா (2)


இன்னோர் தரமும்
இதமாய்த் துடைத்துவிட்டு
 
கண்பட்டுவிடுமென்று
கன்னத்தில் புள்ளிவைத்து
 
முத்தம்கொடுத்து
முதுகினிலே புத்தகமாம்
மூட்டைச் சுமையேற்றி
 
வாசல்வரை வந்து
வழியனுப்பி விடுகையிலே
 
பால் வைத்த நினைவு வரும்;
பதறி வந்து பார்க்கையிலே
 
சேதமில்லை – சிக்கனமாய்
‘கேஸ்’ தீர்ந்து போயிருக்கும்!
 
அடுத்த உருளையை
அடுப்படிக்குக் கொண்டுவந்து
இணைக்கும் பொழுதில்
எப்படியோ ஒரு கரப்பான்
 
கண்ணில் பட்டுவிட,
கவ்வி அதை யெடுத்துக்
காகிதத்தில் வழித்தெறிய,
 
கதவைத் தாளிட்டுக்
கணப்பொழுதில் குளித்துவர,
 
அழுக்குத் துணியெடுத்து
அள்ளிவைத்த வாளியிலே
கொட்டிக் கொண்டிருந்த
குழாய்நீர் நின்றுவிட
காவல் பணியாளைக்
கத்தி ஒரு குரல் கொடுக்க,
 
(கடியாரம் மீது
கண்மீண்டும் பதிந்துவிட)
 
பஞ்சப்படியாய்ப்
பாக்கி வந்த தொகையினிலே
வாயில் புடவை
வாங்கியது நினைவு வர,
 
(அந்த)
உடைமாற்றித் தலைவாரி
ஒப்பனைகள் நிறைவேற்றி
 
சாமி விளக்கில்
சாய்த்து எண்ணெய் விட,
ஒரு சொட்டு,
 
முந்தானை மீது
முழுதாய்ச் சிந்திவிட,
 
(கடியாரம் மீதே
கண்கள் பதிந்திருக்க)
புடைவை மாற்றுவதால்
பொழுதாகிவிடுமென்று
 
அப்படியே விட்டு
அடுப்படிக்கு மீண்டுவந்து
 
சாதம் பிசைந்து
சரசரக்க வாய்திணித்து
 தண்ணீர் புகுத்தித்
தனி உணவுப்பெட்டியிலே    

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக