செவ்வாய், ஏப்ரல் 16, 2013

வேர்வை கவிதையடா (6)


விடுமுறை எடுப்பதாய்
விண்ணப்பம் எழுதி
 
முடிப்பதற்குள் கூந்தல்
முடித்திடுவாள் இரண்டுதரம்!
***
அவசரமாய்க் கொறித்த
அரிசிச் சோறு
வயிற்றைப் பிசைய,
 
வழக்கம்போல் மாத்திரையும்
மயக்கம் கிளப்பிவிட,
 
கண்கள் இருள்சூழ
கையிரண்டும் தளர்ந்துவிழ,
 
சொந்த இடத்தில்
சூடுபட்ட அனுபவத்தில்
நெஞ்சம் புண்ணாகிக்
கடைவிழியில் நீர்நிறைய
 
நெற்றிப் புருவத்தில்
நெல்மணியாய் வேர்வை வர,
 
கன்னக் கதுப்பில்
கோலமென வேர்வையிட,
 
இரண்டு கரத்தினின்றும்
ஆறாய் அது ஒழுக,
 
முதுகுச்சட்டை
முழுதாய் நனைந்துவிட,
 
காலிரண்டும் ஈரமிட,
சேலை வழிதடுக்க,
 
        
 
நின்றாள்!
வியர்த்து நின்றாள்!
 
வேர்வை மழையதனில்
வேதனைக் குளத்தினிலே
நின்றாள்!
***
காதலிளம்
கன்னியரின்
 
கூந்தல் கவிதை,
குறுவிழிகள் தாம் கவிதை,
கொங்கை கவிதையென்று
 
குறிப்பெடுத்தீர்,
இதோ,
 
வேர்வை கவிதையடா!
வேதனைகள் கவிதையடா!
நெஞ்சில்
 
சொல்லாமல் நின்ற
சுமையெல்லாம் கவிதையடா!
 
பார்வை ஆழமெனில்
பார்ப்பதெலாம் கவிதையடா!
 
பாதையெலாம் கவிதையடா,
பாவையரின், மங்கையரின்
 
ஒவ்வோர் அசைவும்
உயிருள்ள கவிதையடா!
 
(மார்ச் 28, 1991 ல் எழுதியது)
© Y.Chellappa
 

 
குறிப்பு:எனது இன்னொரு வலைப்பூவான செல்லப்பா தமிழ் டயரி படித்தீர்களா?

11 கருத்துகள்:

  1. //பாவையரின், மங்கையரின்

    ஒவ்வோர் அசைவும்
    உயிருள்ள கவிதையடா!//

    It is really true.....!
    Meaningful lines....!!
    Keep writing....

    பதிலளிநீக்கு
  2. எனது டாஷ்போர்டில் சிறிது நேரம் முன்பு தான் மற்ற பகுதிகளும் வந்தது... வேர்வை கவி வரிகள் அனைத்தும்... யதார்த்தமான வரிகள் அருமை...

    வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  3. 6ஆவது பகுதியின் கடைசிப் பகுதியை பேஸ்புக்கில் பகிர்ந்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. கவிதையில் கலக்கின்றது மனசு அருமை வரிகள் ஐயா!

    பதிலளிநீக்கு

  5. வணக்கம்!

    வோ்வைக் கவிதையின் வெற்றிக்குப் பட்டொளிரும்
    போர்வை அளித்தேன் புகழ்ந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
  6. நன்றி ஐயா! தங்கள் வரவால் பெரிதும் மகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு
  7. பார்வை ஆழமெனில்
    பார்ப்பதெலாம் கவிதையடா!
    கவிங்கனுக்கு எல்லாமே கவிதைதான்

    பதிலளிநீக்கு
  8. வியர்வையின் கவிதை அருமை...

    பதிலளிநீக்கு
  9. வேர்வை கவிதையடா!
    வேதனைகள் கவிதையடா!
    நெஞ்சில்

    சொல்லாமல் நின்ற
    சுமையெல்லாம் கவிதையடா!


    உயிர்த்துடிப்புமிக்க கவிதைக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு