செவ்வாய், ஏப்ரல் 16, 2013

வேர்வை கவிதையடா (3)


பகலுணவுக்கென்று
பகிர்ந்தெடுத்து மூடிவைத்து
 
கைப்பையைத் தேடிக்
கண்கள் தவிக்கையிலே
 
மின் அளவு பார்க்கும்
சேவகனும் மணியடிக்க
 
அட்டை தேடலிலே
சில நிமிடம் தான் கழிய,
 
அடுத்த வீட்டம்மாள்
சர்க்கரை கடன் கேட்டுக்
கிண்ணமுடன் நுழைந்துவர,
 
சலவைக் காரன்
சட்டைதுணி கொண்டுவர,
 
மச்சினர்க்குப் பெண்பார்க்க
வந்த இடத்தில், இவள்
பக்கமாய் இருந்ததால்
பார்க்க ஒரு மாமி வர,
 
கடியாரம் மணியடித்துக்
காலம் தெரிவிக்க,
 
ஒருவழியாய்
வேலை முடித்து
வந்தவரை வழியனுப்பிக்
கதவைப் பூட்டிக்
கைப்பையில் சாவியிட்டு,
 
பஸ் நிலையம் வருகையிலே
பார்வை பொறிதட்ட,
 
 
வீடு வந்து விரைவாய் ஓர்
மாத்திரையை விழுங்குகையில்
 
‘தவிறிவிட இருந்தேன்,
தப்பினேன் – இவரை
 
நம்ப முடிகிறதா?
நமக்குத்தான் கெட்டபெயர்!
 
ஒருகுழந்தை இருக்கையிலே
மூச்சுவிட நேரமில்லை-இவர் 
இழுத்த இழுப்பெல்லாம்
என்னால் ஆகுவதா?’
 
என்றே இதயம்
இதமாய்க் குரலெழுப்ப,
 
கடமை தவறாத
கடியாரம் ஒலியெழுப்ப,
 
பயணச்சீட்டுக்குப்
பத்துபத்து பைசாவாய்
சில்லறை விரைந்தெடுத்து
சீக்கிரமாய் மீண்டுவந்து
 
தெருவைத் தொடுகையிலே
பஸ் கிளம்பிப் பறந்துவிட,
 
அஞ்சல்காரர், வழியில்
அட்டையொன்று தந்துவிட்டு
 
அளவில் குறைகிறதாம்
அஞ்சல் தலை, யதனால்
தண்டம் கேட்டுச்
சில்லறையைக் கவர்ந்துவிட,
 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக