கண்ணே கலைமானே
இமயத்தலைவன்
நியூஜெர்சியில் பிரபலமான
உயர்நிலைப்பள்ளி அது. இரண்டாவது,
மூன்றாவது கிரேடு மாணவர்களின் பெற்றோர்கள் குழுமியிருந்தனர். வரப்போகும் ஆண்டு
விழாவை வித்தியாசமாகக் கொண்டாடுவதற்கான கருத்துக் கேட்கும் கூட்டம்.
இரண்டாவது படிக்கும்
சகுந்தலா என்கிற ‘ஷக்’ குடன் தாயார் இந்திராவும், ‘அமெரிக்கால பள்ளிக்கூடம்னா
எப்படி யிருக்கும்னு பாக்கணும்’ என்று பாட்டி ராஜம்மாவும் வந்திருந்தனர்.
பள்ளி முதல்வர் மிஸ்.
சாம்சன் அனைவரையும் வரவேற்றார். “இந்த வருடம் ஆண்டு விழாவிற்கு நமது கவர்னரை
அழைப்பதாக இருக்கிறோம். அதனால் விழா மிகவும் சிறப்பாக மட்டுமின்றி
வித்தியாசமாகவும் இருக்கவேண்டும். அதற்கான ஆலோசனைகளை வரவேற்கிறேன்” என்றார்.