வெள்ளரிக்காய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளரிக்காய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஆகஸ்ட் 05, 2013

தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்

தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் குளம் 

தாத்தாவின் முகமே இப்போது மறந்துவிட்டது. (அம்மாவின் அப்பா). இறந்து போய் முப்பத்தாறு வருடங்கள் ஆகிவிட்டது. அவரை முதன்முதலில் பார்த்தபோது எனக்கு வயது ஐந்தரை அல்லது ஆறு இருக்கலாம்.
அன்று மாலை ஐந்து மணிக்கே அம்மா சூடாகச் சமைத்துக் கொண்டிருந்தாள். புளிசாதமும் உருளைக்கிழங்கு பொடிமாசும். மணம் தெருவைக் கூட்டியது. ராத்திரி ஊருக்குப் போகிறோம் என்றார் அப்பா. எந்த ஊர் என்று கேட்கவில்லை. தாத்தா ஊர் தான் என்று தெரியும். இரண்டு வருடங்களாக அம்மா சொல்லிக் கொண்டிருந்தாள்.