திங்கள், மே 06, 2013

அவளுக்கொரு கவிதை (கவிதை)


நான் நானாக

இருந்தேன்

நீ நீயாக

இருந்தாய்

 

நான் நானாக இருந்ததால்

நீ பார்த்தாய்

நீ நீயாக இருந்ததால்

நான் பார்த்தேன்

 

என் பெற்றோரும்

உன் பெற்றோரும்

பார்த்தனர்

நானும் நீயும்

நாமானோம்

 

ஆனாலும்

நீ நீயாக இருந்தாய்

நான் நானாக இருந்தேன்

 

சிறு ஊடலுக்குப்பின்

நீ நீயாகவும்

நான் நீயாகவும்

ஆனோம்

 

நான் நானாகவும்

நீ  நானாகவும்

ஆவதும் கூடும்

எதிர்வரும் நாளில்...

-    கவிஞர் இராய. செல்லப்பா

 
(c) Y.Chellappa
email: chellappay@yahoo.com
 

2 கருத்துகள்:

  1. //நான் நானாகவும்
    நீ நானாகவும்
    ஆவதும் கூடும்
    எதிர்வரும் நாளில்...//

    இவ்வரிகள் மிகவும் பிடிக்கின்றன ....!
    http://sattaparvai.blogspot.in/2013/05/blog-post.html

    பதிலளிநீக்கு