![]() |
|
பிட்ஸ்பர்க் – பிப்ஸ் கன்ஸர்வேட்டரியில் கண்ணாடி மனிதர்கள்
|
இராணிப்பேட்டையில் வக்கீல் தெருவில் வெங்கடாத்திரி என்ற பிரபல வக்கீல் இருந்தார். அவர் வீட்டிற்கு எதிர்ப்புறம் ஒரு சந்து இருக்கும். ‘வக்கீல் தெரு சந்து’ என்று பெயர். மொத்தம் மூன்றே வீடுகள். முதல் வீட்டில் நாங்கள் இருந்தோம். கூடமும், இரண்டு அறைகளும், நுழைந்தவுடன் முற்றத்தில் கிணறும் இருந்த ஓட்டு வீடு.
ஜெயபால் என்பவர் வீட்டு சொந்தக்காரர். ராணிப்பேட்டையின் உயிர் ஆதாரமாக விளங்கிய ஈ.ஐ.டி. பாரி கம்பெனியில் ஊழியர். அதிகம் படிப்பில்லை. மாதா மாதம் வாடகை வாங்க வரும்போது என் தாத்தா அவரை நீண்ட நேரம் நிற்க வைத்த பிறகு தான் தருவார். அதற்கு முன் “வாடகைப் பணம் பன்னிரண்டு ரூபாய் பெற்றுக் கொண்டேன் – இப்படிக்கு ஜெயபால்” என்று பாம்பு பஞ்சாங்கத்தின் மீது தைக்கப்பட்டிருந்த பழுப்பு நிற அட்டையில் எழுதியாக வேண்டும். அது தான் ரசீது.
