பால்டிமோர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பால்டிமோர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஏப்ரல் 20, 2013

மீண்டும் அமெரிக்கா-3 : நான்கு நாள் பயணம்

 வியாழனன்று (18.4.2013) பகலில்  நியுஜெர்சியிலிருந்து நான்கு நாள் பயணமாக பால்டிமோர்/வாஷிங்டன்  வந்தோம். வசந்தகாலம் எங்களைத் தொடர்ந்து வந்தது. நியுஜெர்சியின் குளிரானது கொஞ்சம் கொஞ்சமாக விலகி, லேசான வெயிலுக்கு வழிவிட்டுக் கொண்டிருந்தது. இடையில் டிலாவர்
என்ற ஊரில் சாலையோர இளைப்பாறும் விடுதியில் ஸ்டார்பக்ஸ் காப்பி சாப்பிட்டு வண்டிக்கு 'கேஸ்' நிரப்பிக்கொண்டு  பால்டிமோரை நெருங்கும்போது மழை தூற ஆரம்பித்துவிட்டது.