வியாழன், அக்டோபர் 31, 2013

ஒளி காட்டும் வழி (தீபாவளிக் கவிதை)


































 
சிறுவன்(அண்ணன்):
பொழுதும் இன்னும் விடியவில்லை,
எழுப்பி விட்டார்கள்!
பொங்கும் எண்ணெய்க் குளியலிலே
மூழ்க டித்தார்கள்!

இன்னும் கொஞ்சம் தூங்க வேண்டும்
அனுமதி யில்லை!
என்னடா இது பண்டிகையாம்,
எனக்குப் பிடிக்கலை! 

சிறுமி(தங்கை):
இரண்டு மணிக்கே எழுந்து விட்டேன்,
எண்ணெயில் குளித்தேன்!
புதிய ஆடை புனைந்து விட்டேன்,
பாராய் என்னை!

வீதி எங்கும் சிறுவர் கூட்டம்!
விரைந்து வா அண்ணா!
வெடிவெடிக்கக் காத்தி ருக்கேன்,
சோம்பேறி அண்ணா! 

சிறுவன்(அண்ணன்):
அடுத்த வீட்டு அரவிந்தன்
எழுந்து விட்டானா?
அடுக்கடுக்காய்ச் சரவெடிகள்
வெடித்து விட்டானா?

சிறுமி(தங்கை):
அரவிந் தன் மட்டுமல்ல,
அகிலா, சீதா,
அநிருத்தும் வீதியில் தான்!
அழைக்கின் றார், வா! 

சிறுவன்(அண்ணன்):
அப்படியா, இதோ வந்தேன்,
அம்மா, அம்மா!
ஆடைகளைக் கொண்டுவா,
நேர மாகுதே! 

அம்மா:
ஆமாண்டா, சோம்பேறி,
என்னைச் சொல்கிறாய்!
அவசரமாய் உடுத்திக்கொள்,
இந்தா பட்டாசு!
சிறுமி(தங்கை):
அண்ணா அண்ணா வாவா வா
ஆரம் பிக்கலாம்!
அழகுக் கம்பி மத்தாப்புடன்
சாட்டை, சட்டியும்

சக்கரமும் மாத்திரையில்
பாம்பும் எழுப்பலாம்!
சத்தமின்றிப் பூவாணம்
சுட்டுத் தள்ளலாம்! 

சிறுவன்(அண்ணன்):
அத்தனையும் உனக்குத் தான்!
வெடிகள் மட்டுமே
அடுக்கடுக்காய் நான் வெடிப்பேன்
அஞ்சிட மாட்டேன்! 

அம்மா, அப்பா:
தாத்தாவையும் கூப்பிடுங்கள்
பாட்டியும் வரட்டும்!
தீபாவளி ஆனந்தத்தைப்
இரசித்திட வரட்டும்!

இல்லந்தோறும் வெளிச்சமாகி
இருட்டு மறையட்டும்!
ஒளிகாட்டும் வழியினிலே
உலகம் சிரிக்கட்டும்!

-    கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்)

(நண்பர் ரூபன் அவர்களே? இப்போது மகிழ்ச்சி தானே?)

 (c) Y.Chellappa
email: chellappay@yahoo.com 

20 கருத்துகள்:

  1. மிகவும் நன்றி ஐயா... கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி...

    அருமையான கவிதையை (இணைப்பை) நடுவர்களுக்கு அனுப்பி வைக்கிறேன்...

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

    (தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...

    பதிலளிநீக்கு
  2. அடுத்த வீட்டு அரவிந்தன்?நட்பா பொறாமையா

    Typed with Panini Keypad

    பதிலளிநீக்கு
  3. இல்லந்தோறும் வெளிச்சமாகி
    இருட்டு மறையட்டும்!
    ஒளிகாட்டும் வழியினிலே
    உலகம் சிரிக்கட்டும்!

    அருமையான கவிதை

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. நான் போட்டிக்காகவென்று எழுதுவதில்லை. கவிதை வரும்போது மட்டுமே எழுதுகிறேன். இப்போது வந்தது. எழுதினேன். எனது ஆதரவு என்றும் இளைய தலைமுறைக்கே. அவர்கள தான் இன்னும் அதிகமாகச் சாதிக்கப்போகிறார்கள். தங்கள் வருகைக்கு மீண்டும் நன்றி. தீபாவளி வாழ்த்துக்கள்.

      நீக்கு
  4. வசன நடை கவிதை நன்று!
    இன்னும் சற்றே மெருகேற்றினால், சிறுவர் இதழ்களில் அச்சேரே வாய்ப்புண்டு!.

    பதிலளிநீக்கு
  5. கருத்துரைக்கு நன்றி, நண்பரே! தீபாவளி வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. அழகான கவிதை அய்யா. காட்சியாய் கண்முன்னே நிறுத்தியது அருமை. போட்டிக்காக எழுதாவிட்டாலும் வெற்றி உங்கள் வசமாகட்டும். தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. தங்களுக்கும் எனது மனம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

      நீக்கு
  7. இதயம் கனிந்த தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா ! தங்களுக்கும் எனது மனம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள் !

      Typed with Panini Keypad

      நீக்கு
  8. ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் தீபாவளி தின சம்பாஷணையைக் கண் முன் கொண்டு வந்து நிறுத்திவிட்டீர்கள், பாராட்டுக்கள்! நாங்களும் ஒரு காலத்தில் இப்படி போட்டி போட்டுக் கொண்டு வெடி வெடித்து கொண்டாடியது நினைவுக்கு வந்தது.

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்
    தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு நன்றி. எனது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் !

      Typed with Panini Keypad

      நீக்கு
  9. சிறுவனின் நினைவலைகளால் பிறந்த பெரியவரின் யதார்த்த கவிதை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சியளிக்கிறது ஐயா!

      நீக்கு
  10. வணக்கம்

    தங்களின் மின் அஞ்சல் சுமந்த கவிதை வந்து கிடைத்து விட்டது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது தங்களின் போட்டிக்கான கவிதை நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை தங்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன்.

    போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்
    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.....

    என்பக்கம் புதிய பதிவாக கவிதைப்போட்டியில்பங்குபற்றியவர் தகவல் விபரம்-http://2008rupan.wordpress.com

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் பதிவையும், மற்ற நாற்பதுக்கும் மேற்பட்ட கவிஞர்களின் படைப்புகளையும் ஒருசேரப் படித்தேன். பிரமிப்பாக இருந்தது. ஆனால் நூறு பேராவது கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்தேன். அடுத்த ஆண்டு நிகழலாமோ? நன்றிகள்.

      நீக்கு
  11. தீபாவளிக்கு ஊருக்கு சென்று இன்றே வந்தேன். ஆதலால் தாமத வருகை புதிய முயற்சியில் உரைநடைக்கவிதையாக தந்த விதம் சிறப்புங்க.
    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு